மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு
செவ்வாயன்று (ஏப்ரல் 4) மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் இருந்து வெளியேறுவதாக ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர், ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து இடது இடுப்பு ஃப்ளெக்சர் காயத்தால் வெளியேறினார். அதன்பிறகு எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் சிகிச்சையில் இருந்தார். நடால் ட்விட்டரில், "என்னால் எனது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான மான்டே கார்லோவில் விளையாட முடியாது. அதிகபட்ச உத்தரவாதங்களுடன் விளையாடும் நிலையில் நான் இன்னும் இல்லை. விரைவில் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையில் எனது பயிற்சியை தொடர்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்குகிறது.