
'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர்
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாழ்க்கையில் இலக்குகளை அடைவதற்கு உடற்தகுதி குறித்து விழிப்புணர்வும் ஒழுக்கமும் இருப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த தனக்கு பல சலுகைகள் கிடைத்ததாகவும், ஆனால் அவற்றையெல்லாம் மறுத்ததாகவும் கூறினார்.
செவ்வாயன்று (மே 30) மகாராஷ்டிர அரசின் ஸ்வச் முக் அபியான் (எஸ்எம்ஏ) எனும் வாய்வழி சுகாதார பிரச்சாரத்திற்கான "ஸ்மைல் அம்பாசிடர்" என்று பெயரிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
sachin tendulkar statement
சச்சின் டெண்டுல்கர் பேசியதன் முழு விபரம்
ஸ்வச் முக் அபியான் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, நான் பள்ளியை விட்டு வெளியே வந்தேன்.
எனக்கு பல விளம்பரச் சலுகைகள் வர ஆரம்பித்தன. ஆனால் புகையிலை பொருட்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்று என் தந்தை என்னிடம் கூறினார்.
எனக்கு புகையிலை தொடர்பான விளம்பரங்கள் அதிகம் வந்தன. ஆனால் அவற்றில் எதையும் நான் ஏற்கவில்லை.. ஐம்பது சதவீத குழந்தைகளுக்கு வாய்வழி நோய்கள் உள்ளன.
அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஆனால் யாரும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இது அவர்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தும்." என்று கூறினார்.