பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் IPL 2024 தொடரிலிருந்து வெளியேறுகிறது மும்பை இந்தியன்ஸ் அணி
நேற்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் நடைபெறும் ஐபிஎல் 2024 போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் அணி என்ற பெயர் பெறுகிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. தலைமை மாற்றத்துடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ், அடுத்தடுத்து தோல்வி அடைந்து விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் சொற்ப வெற்றிகளையே பெற்றது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருந்தது.