அடுத்த செய்திக் கட்டுரை
கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்!
எழுதியவர்
Sekar Chinnappan
Jun 01, 2023
06:42 pm
செய்தி முன்னோட்டம்
உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் தனது தலைமைத்துவ திறமைக்கு பெயர் பெற்றவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி.
அவர் ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்தாவது பட்டத்தை பெற்றுக் கொடுத்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த சீசனில் அவர் விளையாடிய அனைத்து மைதானங்களில் 'தோனி' கோஷத்தை ரசிகர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் பட்டம் வென்ற கையேடு முழங்கால் காயத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று அறுவை சிகிச்சை செய்ய எம்எஸ் தோனி மும்பையில் முகாமிட்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக, தோனி கையில் பகவத் கீதை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகிய நிலையில், அது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
MS Dhoni reading the Bhagavad Gita. pic.twitter.com/lla0rtWWkX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 1, 2023