அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல்லில் சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டி : தோனியை கவுரவித்த சிஎஸ்கே நிர்வாகம்
எழுதியவர்
Sekar Chinnappan
Apr 12, 2023
07:53 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பல சாதனைகளை படைத்துள்ள எம்எஸ் தோனி தற்போது மற்றொரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
புதன்கிழமை (ஏப்ரல் 12) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றதன் மூலம் ஐபிஎல்லில் 200வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு தலைமை தாங்கி உள்ளார்.
அதிக ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனையை தோனி கொண்டுள்ளார். 2008 இல் ஐபிஎல் தொடங்கியது முதலே தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனியை கவுரவிக்கும் விதமாக, சிஎஸ்கே உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசன் போட்டி தொடங்கும் முன் தோனிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே ட்வீட்
Salute the King and whistle for his 2️⃣0️⃣0️⃣th as Thala!#Thala200 #WhistlePodu 🦁💛 pic.twitter.com/UCZ5GpaBhb
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2023