இது தான் கடைசி சீசன்? எம்எஸ் தோனியின் செயலால் ரசிகர்கள் சந்தேகம்!
ஐபிஎல் 2023 சீசனில் ஞாயிற்றுக்கிழமை (மே 14) சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 'லாப் ஆஃப் ஹானர்' சிறப்பை ஏற்றார். அப்போது பல ஆண்டுகளாக தனக்கும் அணிக்கும் அளித்த அனைத்து ஆதரவிற்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோல்வியில் முடிந்தாலும், தோனியின் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அவர் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கைகுலுக்கினார். தோனி ஒரு கையில் ராக்கெட்டை வைத்திருப்பதைக் கூட காண முடிந்தது. ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களிடம் சில ஜெர்சிகளை வீசியதோடு, ராக்கெட்டில் பந்துகளையும் அடித்தார்.
ஐபிஎல் 2023 சீசனுடன் எம்எஸ் தோனி விடைபெறுகிறாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தனது ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் 2023 அவரது கடைசி சீசன் என பலரும் நம்பி வருகின்றனர். டேனி மோரிசன் கடைசி ஐபிஎல்லில் கடைசி சீசனை எப்படி அனுபவித்து விளையாடுகிறீர்கள் என கேட்டதற்கும், தான் இதை கடைசி சீசன் எனக் கூறவில்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் நடந்து கொண்ட விதம் தோனிக்கு ஐபிஎல்லில் இது தான் கடைசி சீசனா என்ற கேள்வி மீண்டும் ரசிகர்களிடையே விவாத பொருளாகியுள்ளது. ச ர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்ததை போல ஐபிஎல்லிலும் செய்ய வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.