சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4,500 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா மட்டுமே இந்த சாதனையை செய்திருந்தார். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது தோனி இந்த மைல்கல்லை எட்டினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளில் தோனி 20 ரன்களை எடுத்தார். அவர் சென்னை அணிக்காக 216வது ஐபிஎல் போட்டியில் (187 இன்னிங்ஸ்) இந்த சாதனையை படைத்தார். இதில் 22 அரைசதங்களும் அடங்கும். இதற்கிடையில், ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 176 போட்டிகளில் 4,687 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல்லில் எம்எஸ் தோனியின் புள்ளிவிபரங்கள்
தோனி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 31.76 என்ற சராசரியில் 667 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ரெய்னாவின் 661 ரன்கள் சாதனையை அவர் முறியடித்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஐந்தாவது அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். மேலும் இந்த சீசனின் தொடக்கத்தில், தோனி ஐபிஎல்லில் 5,000 ரன்கள் எனும் மைல்கல்லை கடந்த மிக வயதான கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் தோனி 349 பவுண்டரிகள் மற்றும் 239 சிக்சர்களுடன் 39.33 சராசரியில் 5,074 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்