NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!
    விளையாட்டு

    ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!

    ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!
    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 26, 2023, 11:43 am 0 நிமிட வாசிப்பு
    ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!
    ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேற்றம்

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார். சிராஜ், நியூசிலாந்து தொடர் தொடங்கும் முன்பு 685 ரேட்டிங் புள்ளிகளுடன், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில், தற்போது சிராஜ் 729 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்து நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். சிராஜுக்கு அடுத்தபடியாக, 20வது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் குல்தீப் யாதவ் உள்ளார்.

    முகமது சிராஜின் ஒருநாள் போட்டி புள்ளி விபரங்கள்

    சிராஜ் 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். நான்கு வருட காலத்தில் 21 ஒருநாள் போட்டிகளில் 20.76 சராசரியில், 4.62 என்ற எகானாமியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளின் பவர்பிளேயில் ஆதிக்கம் செலுத்தும் சிராஜ், பவர்பிளேயில் 14.2 சராசரியில், 3.81 என்ற குறைந்த எகானாமியில் 25 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த கட்டத்தில் அவர் 3.81 பொருளாதாரத்தைக் கொண்டுள்ளார். சிராஜ் 2022 ஆம் ஆண்டில் பவர்பிளேயில் மட்டும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது மற்ற எந்த ஒரு பந்து வீச்சாளரை விடவும் அதிகம் ஆகும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஐசிசி
    ஒருநாள் தரவரிசை
    பந்துவீச்சு தரவரிசை

    சமீபத்திய

    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    'Iron Man' திரைப்பட நாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர் சாப்பிட்ட சுவிங்கம் ஏலம்! வைரல் செய்தி
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்

    ஐசிசி

    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம் டி20 தரவரிசை
    ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 4இல் 3 இந்தியர்கள் டெஸ்ட் தரவரிசை
    20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஐசிசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா கிரிக்கெட்
    ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு ஐசிசி விருதுகள்

    ஒருநாள் தரவரிசை

    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்! டி20 கிரிக்கெட்
    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா! ஒருநாள் கிரிக்கெட்

    பந்துவீச்சு தரவரிசை

    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம் அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம் டி20 தரவரிசை
    பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம் கிரிக்கெட்
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!! அஸ்வின் ரவிச்சந்திரன்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023