'கிரிக்கெட்டில் இருந்து தான் கற்றுக் கொண்டவை', நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்ட சத்யா நாதெல்லா
செய்தி முன்னோட்டம்
'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு மதம்', இந்தியாவில் பல முக்கிய நபர்கள் இதனை சொல்லக் கேட்டிருப்போம்.
உண்மையில் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் தான். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லாவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கிரிக்கெட் குறித்த தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.
ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் மதியாஸ் டாஃப்னருடனான நேர்காணலில் போது கிரிக்கெட் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார் சத்யா நாதெல்லா.
அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்தாலும், அடிப்படையில் நாதெல்லா ஒரு இந்தியர், இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர்.
கிரிக்கெட்
சத்யா நாதெல்லா கூறியது என்ன?
"ஒரு இந்தியனாக, ஒரு தெற்காசியனாக என்னைப் பொருத்தவரையில் கிரிக்கெட் என்பது ஒரு மதம். கிரிக்கெட்டுடன் தான் நாங்கள் வளர்ந்தோம்" எனக் கூறியிருக்கிறார் நாதெல்லா.
'கிரிக்கெட்டில் இருந்து என்ன விதமான தலைமைப் பண்புகளை கற்றுக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு பதிலளித்த நாதெல்லா, "ஒரு முறை என்னுடைய நகரமான ஹைதராபாத்தில் லீக் மேட்ச் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது அந்தப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு விளையாட்டு வீரரும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து எங்களை மறந்து நாங்கள் புகழ்ந்து போற்றிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்களுடைய பயிற்சியாளர், தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருக்காதீர்கள். சென்று போட்டியிடுகள்' என்று கூறினார்."
சத்யா நாதெல்லா
கற்றுக்கொள்ள வேண்டும், பிரமிக்கக் கூடாது:
"களத்தில் இருக்கும் போது நம்முடைய போட்டியாளரைப் பார்த்து பிரமித்து நிற்கக் கூடாது. அவருடன் போட்டியிட்டு நமக்குத் தேவையானதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்" எனக் கூறியிருக்கிறார்.
மேலும், தன்னுடைய அணியில் ஒரு நபர் ஒட்டுமொத்த அணியின் நம்பிக்கையையும் வேண்டுமென்ற குலைப்பதை தான் பார்த்திருக்கிறேன்.
ஒரே ஒரு நபரால் மற்ற அனைவரின் முயற்சிகளும் வீணானது. நாம் வேலை பார்க்கும் இடங்களிலும் அந்த இடத்திற்குப் பொருந்தாத அல்லது அந்த இடத்தை விரும்பாத ஒருவர் இருந்தால், அந்த பிரச்சினையை அப்போதே களைய வேண்டிய அவசியத்தையும் கிரிக்கெட்டி மூலமாகவே தான் கற்றுக் கொண்டேன் எனத் தெரிவித்திருக்கிறார் சத்யா நாதெல்லா.