அடுத்த செய்திக் கட்டுரை

மும்பை இந்தியன்ஸ் கேப்டனுக்கு பிடித்த அணி ஆர்சிபி'யா? வைரலாகும் பழைய ட்வீட்!
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 04, 2023
06:23 pm
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஐபிஎல் சனிக்கிழமை (மார்ச் 4) தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் பழைய ட்வீட் வைரலாகி வருகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஹர்மன்ப்ரீத் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskHarman என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் கேள்வி கேட்குமாறு பதிவிட்டிருந்தார்.
ஒரு ரசிகர் ஐபிஎல்லில் மிகவும் பிடித்த அணி எது என கேள்வியெழுப்ப, ஆர்சிபி அணி தான் எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில், பிடித்த அணியான ஆர்சிபியில் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றுவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் இன்று முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஹர்மன்ப்ரீத் கவுரின் ட்வீட்
RCB @RCBTweets https://t.co/5s8hdVEhEO
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) March 26, 2020