
மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
ஐஎஸ்எல் கால்பந்து கிளப்களில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி திங்களன்று (ஜூன் 12) மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தத்தை மூன்று வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் அவர் மே 2026 வரை மும்பை சிட்டி எஃப்சியில் இடம் பெறுவார்.
2020 இல் மும்பை சிட்டி எஃப்சியில் சேர்ந்ததிலிருந்து மெஹ்தாப் சிங் அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக மாறி உள்ளார். மேலும் ஏஎஃப்சி யு23 சாம்பியன்ஷிப்பில் இந்திய யு-23 அணியில் விளையாடி உள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய கால்பந்து அணியிலும் இடம் பெற்று மணிப்பூரில் நடந்த முத்தரப்பு போட்டியில் மியான்மருக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்தார்.
இவரது கோல் மூலம் அந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Super Singh: Signed & sealed ✍️ 2️⃣0️⃣2️⃣6️⃣ 🩵#Mehtab2026 #MumbaiCity #AamchiCity 🔵 pic.twitter.com/u3EG5kQdKH
— Mumbai City FC (@MumbaiCityFC) June 12, 2023