CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அணிக்கு பெரும் அடியாக, நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், கான்வேயின் மாற்றாக ரிச்சர்ட் க்ளீசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024இல் காயம் காரணமாக டெவோன் கான்வே வெளியேறுகிறார். கடந்த இரண்டு சீசன்களில் CSK அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே, 23 போட்டிகளில் 924 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒன்பது அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோரான 92* ஆகியவை அடங்கும். அவர் இல்லாதது பேட்டிங் வரிசையில் வெற்றிடத்தை உருவாக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
CSK அணியில் இணைகிறார் ரிச்சர்ட் க்ளீசன்
Welcoming with a glee!🤩🥳 Whistle Vanakkam, Richard! 🦁💛 🔗 - https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024