Page Loader
'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்
மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்

'வலி தாங்க முடியல' : மார்னஸ் லாபுசாக்னேவை பதறவைத்த முகமது சிராஜ்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2023
07:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுக்கு எதிராக லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. போட்டியில் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை 10 பந்துகளில் டக்கவுட் ஆக்கி முகமது சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் முகமது சிராஜ் வீசிய ஒரு பந்து மார்னஸ் லாபுசாக்னேவின் கட்டை விரலில் பட்டதால், பேட்டை உதறிவிட்டு வலியால் அவதிப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் பிசியோ அழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் சிறிது நேரத்திலேயே மீண்டும் விளையாட தொடங்கினார். எனினும் 26 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

Instagram அஞ்சல்

Instagram Post