
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
செய்தி முன்னோட்டம்
லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
181 ரன்கள் என்ற போட்டி இலக்கை துரத்திய எல்எஸ்ஜி அணி, நிக்கோலஸ் பூரன் மற்றும் ஐடன் மார்க்ராமின் அபார அரைசதங்களால் மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றியை உறுதி செய்தது.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் (60) மற்றும் சாய் சுதர்சன் (56) ஆகியோர் 120 ரன்கள் கூட்டணி அமைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சரிவு
மிடில் ஆர்டர் சரிவு
இருப்பினும், வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் ஆட்டமிழந்ததால் மிடில் ஆர்டர் சரிந்தது. குஜராத் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது,
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ரவி பிஷ்னோய் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல்லில் தொடக்க வீரராக களமிறங்கிய எல்எஸ்ஜி கேப்டன் ரிஷப் பண்ட் வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இருப்பினும், மார்க்ராம் (58) மற்றும் பூரன் (61) ஆகியோர் ஆக்ரோஷமான ஸ்ட்ரோக் ஆட்டத்தால் இன்னிங்ஸைக் கட்டுப்படுத்தினர்.
அவர்களின் ஆட்டமிழப்புகள் சிறிது பதற்றத்தை ஏற்படுத்தின. ஆனால் ஆயுஷ் படோனியின் 20 பந்துகளில் 28 ரன்கள் லக்னோவை வெற்றிக்கு இட்டுச் சென்றன.
வெற்றி
இறுதி ஓவரில் த்ரில் வெற்றி
கடைசி ஓவரில் 6 பந்துகளை ஆறு ரன்கள் தேவை எனும் நிலையில், ஆயுஷ் படோனி ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸர் அடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இது லக்னோ மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிகபட்ச சேஸ் வெற்றியாகும்.
வெற்றிகரமான துரத்தலுக்கு அடித்தளமிட்ட அவரது தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக ஐடன் மார்க்ராம் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் இந்த வெற்றி மூலம், தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற குஜராத் அணி ஐபிஎல் 2025 தொடரில் இரண்டாவது தோல்வியை பெற்றுள்ளது.