LOADING...
லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து ஜாம்பவான்
FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து ஜாம்பவான்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2026
06:56 am

செய்தி முன்னோட்டம்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup) வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த மாபெரும் வரலாற்று சாதனையாளராக உருவெடுத்துள்ளார். 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் குரூப்-J பிரிவில், டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரியாவுக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஜெர்மனியின் புகழ்பெற்ற வீரர் மிரோஸ்லாவ் குளோஸேவின் (16 கோல்கள்) நீண்டகால சாதனையை மெஸ்ஸி முறியடித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மெஸ்ஸி வரலாற்று சாதனை

ஆட்டம்

ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டமும் மெஸ்ஸியின் கம்பேக்கும்

இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்த ஒரு பொன்னான பெனால்டி வாய்ப்பை ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மெஸ்ஸி தவறவிட்டார். எனினும், அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வந்து ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெதினா கொடுத்த அசிஸ்ட்டைப் பயன்படுத்தி, தனது அசாத்திய இடதுகால் ஷாட் மூலம் முதல் கோலை அடித்து உலகக் கோப்பை சாதனையைத் தன்வசப்படுத்தினார். பின்னர், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (95-வது நிமிடத்தில்) ஜூலியன் ஆல்வரெஸ் அடித்த ஷாட் தடுக்கப்பட்டு மீண்டு வந்த பந்தை, லாவகமாகப் புகுத்தி தனது இரண்டாவது கோலையும், அணியின் 2-0 என்ற வெற்றியையும் மெஸ்ஸி உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி நடப்பு உலகக் கோப்பையின் நாக்-அவுட் (Round of 32) சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

Advertisement

சாதனை

தகர்க்கப்பட்ட உலகக் கோப்பை சாதனைகள்

இந்த ஒரே போட்டியின் மூலம் மெஸ்ஸி பல்வேறு சர்வதேச சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார். பிரேசில் பெண் கால்பந்து வீராங்கனை மார்தாவின் (17 கோல்கள்) சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் பாலின வேறுபாடின்றி அதிக கோல் அடித்த வீரரானார் மெஸ்ஸி. உலகக் கோப்பை அரங்கில் மெஸ்ஸி பெற்ற 18-வது வெற்றி இதுவாகும். இதிலும் மிரோஸ்லாவ் குளோஸேவின் (17) சாதனையை அவர் முறியடித்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் 26 கோல் பங்களிப்புகளை (18 கோல்கள், 8 அசிஸ்ட்கள்) வழங்கி பிரேசிலின் பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

தகவல்

ஒரு சுவாரசியமான எதிர்மறை சாதனை

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக பெனால்டி வாய்ப்புகளை எதிர்கொண்ட (7 முறை) மற்றும் அதிக பெனால்டிகளைத் தவறவிட்ட (3 முறை) வீரர் என்ற தேவையற்ற சாதனையையும் கானாவின் அஸமோவா கியானை முந்திக் கொண்டு மெஸ்ஸி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போதைய தொடரில் 2 போட்டிகளில் 5 கோல்களுடன் (அல்ஜீரியாவுக்கு எதிராக ஹாட்ரிக் உட்பட) மெஸ்ஸி அசுர ஃபார்மில் உள்ளார்.

Advertisement