LOADING...
'சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது!' பிசிசிஐ வர்ணனையாளர் பணியிலிருந்து விலகினார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
வர்ணனையாளர் பணியிலிருந்து லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விலகல்

'சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது!' பிசிசிஐ வர்ணனையாளர் பணியிலிருந்து விலகினார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 20, 2026
06:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பிரபல வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தான் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தனது முடிவிற்கான காரணங்களைச் சமூக வலைதளத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் 2026 தொடங்குவதற்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு

23 ஆண்டுக்காலப் புறக்கணிப்பு: லக்ஷ்மன் முன்வைக்கும் குற்றச்சாட்டு

தனது விலகல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள 60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ தன்னைத் தகுந்த முறையில் பயன்படுத்தவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். "கடந்த 23 ஆண்டுகளாக எனக்கு டாஸ் மற்றும் பிரசன்டேஷன் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால், வர்ணனைக்கு வரும் புதியவர்களுக்கு அந்த வாய்ப்புகள் உடனே வழங்கப்படுகின்றன. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்தபோது கூட எனக்கு இந்தப் பணிகள் வழங்கப்படவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை

உண்மை தெரிந்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைவார்கள்

தனது ஓய்வு முடிவு என்பது ஒரு பெரிய கதையின் ஆரம்பம் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், "இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் தெரியவந்தால் பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சியடைவார்கள். பிசிசிஐ கூட இதனை நம்பாது." என்று அதிரடியாகக் கூறியுள்ளார். தனது நேர்மையான கருத்துகளுக்காக அறியப்படும் அவர், தனது சுயமரியாதையை அடகு வைத்துக்கொண்டு இந்தப் பணியைத் தொடர விரும்பவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

அஸ்வின்

அஸ்வின் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இந்த அறிவிப்பைக் கண்டு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். "ஏன் இந்த ஐபிஎல் தொடரில் நீங்கள் வர்ணனை செய்யப் போவதில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வினும் ஓய்வு முடிவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கிரிக்கெட்

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனின் கிரிக்கெட் பயணம்

1985இல் இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் வென்றபோது முக்கியப் பங்கு வகித்தவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகிய பின், நீண்ட காலமாக வர்ணனையாளராகத் தனது முத்திரையைப் பதித்து வந்தார்.

Advertisement