LOADING...
நீண்ட நாள் கோப்பை வறட்சிக்கு முடிவு; ஆஸ்திரேலிய ஓபனில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபனில் லக்ஷ்யா சென் வெற்றி

நீண்ட நாள் கோப்பை வறட்சிக்கு முடிவு; ஆஸ்திரேலிய ஓபனில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2025
05:58 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் (சூப்பர் 500) இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இந்த ஆண்டின் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார். நீண்ட காலமாகக் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வந்த, உலகத் தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள லக்ஷ்யா சென், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானின் யூஷி டனாக்காவை நேரடி செட்களில் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார். தன்னைவிட தரவரிசையில் குறைந்த வீரரான யூஷி டனாக்காவை 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்த லக்ஷ்யாவிற்கு வெறும் 38 நிமிடங்களே தேவைப்பட்டது. முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீரரான சௌ தியன் சென்னை வென்றது குறிப்பிடத்தக்கது.

தந்தை

தந்தை முன் வெற்றி

போட்டியின் போது, தனது தந்தையும் பயிற்சியாளருமான டி.கே.சென் அருகில் இருந்த நிலையில், லக்ஷ்யா வெற்றிக்குப் பிறகு உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினார். வெற்றிக்குப் பிறகு தந்தை டி.கே.சென் தன் மகனைத் தூக்கிக் கொண்டாடியது மனதைக் கவரும் தருணமாக அமைந்தது. ஆக்ரோஷமான ஆட்டத்திற்குப் பெயர் பெற்ற லக்ஷ்யா சென், இந்தப் போட்டியில் எதிராளியான டனாக்காவை எந்த நேரத்திலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. இரண்டாம் செட்டை 21-11 என மிக வேகமாக முடித்தார். இந்த வெற்றியின் மூலம் லக்ஷ்யா சென் இந்த ஆண்டுச் சிறப்பான முறையில் நிறைவு செய்கிறார். அவர் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை தக்கவைக்க கடுமையான போராடினாலும் சமீபத்தில் ஜப்பான் மாஸ்டர்ஸ் அரையிறுதி மற்றும் ஹைலோ ஓபன் காலிறுதிப் போட்டி வரையிலும் முன்னேறினார்.