Page Loader
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 09, 2023
02:46 pm

செய்தி முன்னோட்டம்

ஜூன் 7ல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்த நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 8) இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி வருகிறது. இதில் விராட் கோலி வெறும் 14ரன்களில் அவுட்டான நிலையில், டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பிய உடனேயே, உணவு உட்கொள்ளும் புகைப்படம் வெளியாகியது ரசிகர்களிடையே கடுப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சிலர், "2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டெண்டுல்கர் ஆரம்பத்திலேயே அவுட்டாகிய பிறகு மூன்று நாட்கள் சாப்பிடவில்லை. ஆனால் கோலி வெளியேறிய உடன் மகிச்சியாக உணவு உட்கொள்கிறார்." என கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post