கோல்ஃப், உணவு மற்றும் நண்பர்கள்: தோனியின் விருப்பமான பயண இடமாக அமெரிக்கா இருப்பதன் காரணம்
ஒரு நேர்காணலின் போது, 'தல' எம்எஸ் தோனி அமெரிக்காவை தனது விருப்பமான பயண இடமாக வெளிப்படுத்தினார். அதற்கு காரணம், அங்கே கோல்ஃப் விளையாடுவதற்காகவும், உணவு, தனது நண்பர்களுடன் சில பொன்னான நேரத்தை செலவிடுவதையும் விரும்புவதாகவும் கூறினார். சிஎஸ்கே-கான விளம்பர நிகழ்வின் போது, தோனி அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி தான் தனது விருப்பமான பயண இடமாக இருந்ததை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பை வென்ற இந்திய முன்னாள் கேப்டன், விடுமுறைகளின் போது நியூஜெர்சியில் உள்ள தனது நண்பரின் இடத்திற்குச் செல்வதாகவும், அவர்கள் மணிக்கணக்கில் கோல்ஃப் விளையாடி, இடைவேளைக்கு இடையில் நல்ல உணவை ருசித்து மகிழ்வதாகவும் கூறினார்.
அமெரிக்கா ஏன் தோனியின் ஃபேவரைட்?
அமெரிக்காவிற்கு விடுமுறைக்கு செல்லும் போது அங்கே என்ன செய்வீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு,"நாலரை மணி நேரம் கோல்ஃப் விளையாடுவோம். பிறகு உட்கார்ந்து, உணவு சாப்பிடுவோம். மறுநாள் அதையே செய்கிறோம்". "15-20 நாட்கள் வேறு ஒன்றும் செய்யாமல், கோல்ஃப் விளையாடுவோம், உணவு சாப்பிடுவோம், பின்னர் கிளப்பில் உறுப்பினர்களுக்கிடையேயான போட்டி நடைபெறும். அதனால் நாங்கள் போட்டியில் கலந்து கொண்டு திரும்பி விடுவோம். அவ்வளவுதான். ஆனால் எனக்கு அதுதான் சிறந்த 15-20 நாட்கள், கோல்ஃப் விளையாடுவது மற்றும் உணவு உண்பது மட்டுமே" என கூறினார். ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பையின் போது தோனி அமெரிக்கா செல்வார் என்று ரோஹித் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது.