
ஐபிஎல் 2025: ராமநவமி காரணமாக கேகேஆர் vs எல்எஸ்ஜி போட்டி கொல்கத்தாவிலிருந்து குவஹாத்திக்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக எழுந்த பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஈடன் கார்டன்ஸில் முதலில் திட்டமிடப்பட்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) இடையேயான ஐபிஎல் 2025 போட்டி, குவஹாத்தியின் பர்சபரா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது என்று உள்ளூர் அதிகாரிகள் வங்காள கிரிக்கெட் சங்கத்திற்கு தெரிவித்தனர்.
இதனால் வங்காள கிரிக்கெட் சங்கம் இடம் மாற்றத்தைக் கோரியது.
இதனால் குவாஹாத்திக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த கடைசி நிமிட மாற்றம் குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
ராம நவமி
ராம நவமியால் போட்டியை மாற்றுவது இது முதல்முறையல்ல
மார்ச் 26 மற்றும் 30 ஆம் தேதிகளில் ராஜஸ்தான் ராயல்ஸின் இரண்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏற்கனவே தயாராக உள்ள குவஹாத்தி, இப்போது இந்தப் போட்டியையும் நடத்தும்.
ராம நவமி காரணமாக கேகேஆர் போட்டி மாற்றியமைக்கப்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு, இதேபோன்ற பாதுகாப்பு கவலை காரணமாக ஒரு போட்டியை மாற்ற வழிவகுத்தது.
குவஹாத்தியில் நடைபெறும் போட்டியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேகேஆர் அணி எதிர்கொள்ளும்.
அதே நேரத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி எல்எஸ்ஜி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்ளும்.