Page Loader
ஆடவர் கிரிக்கெட்டில் முதல் பெண் கள நடுவர் : கிம் காட்டன் வரலாற்று சாதனை
ஆடவர் கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்ற வரலாற்று சாதனை படைத்த கிம் காட்டன்

ஆடவர் கிரிக்கெட்டில் முதல் பெண் கள நடுவர் : கிம் காட்டன் வரலாற்று சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2023
05:35 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தைச் சேர்ந்த கிம் காட்டன், ஆடவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். புதன்கிழமை (ஏப்ரல் 5) நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டுனெடினில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் கள நடுவராக கிம் காட்டன் பணியாற்றினார். 45 வயதான கிம் காட்டன் இதற்கு முன்பு 16 மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 44 மகளிர் டி20 போட்டிகளிலும் நடுவராக இருந்துள்ளார். மேலும், கடந்த பிப்ரவரியில் நடந்த 2022 மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி (50 ஓவர்) மற்றும் 2023 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆகிய இரண்டிற்கும் கள நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

ஐசிசி ட்வீட்