
மகளிர் அணியை கலைத்தது கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து கிளப்!
செய்தி முன்னோட்டம்
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு விதித்துள்ள நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் தனது மகளிர் அணியை தற்காலிகமாக கலைப்பதாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவித்தது.
இந்தியன் சூப்பர் லீக் பிளேஆப் சுற்றில் வெளியேறியதற்காக பிளாஸ்டர்ஸ் அணிக்கு ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளா பிளாஸ்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் மகளிர் அணியின் தற்காலிக இடைநிறுத்தத்தை நாங்கள் கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்.
கால்பந்து கூட்டமைப்பால் எங்கள் கிளப் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட நிதித் தடைகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கூட்டமைப்பின் அதிகாரம் மற்றும் முடிவுகளை நாங்கள் மதிக்கும் அதே வேளையில், எங்கள் கிளப்பின் பல்வேறு செயல்பாடுகளில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தில் எங்களின் ஏமாற்றத்தை மறுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Club Statement. #KBFC #KeralaBlasters
— Kerala Blasters FC (@KeralaBlasters) June 6, 2023