Page Loader
"கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயரை கைவிடுக!": எம்பி கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்
கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயரை கைவிட எம்பி கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

"கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயரை கைவிடுக!": எம்பி கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 06, 2023
06:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயரை நீக்க பிசிசிஐ அறிவுறுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை சேர்க்கும் கலாச்சாரம் தமிழகத்தில் இருந்து நீங்கிவிட்டாலும், தமிழகம் தாண்டி இந்தியா முழுவதுவே அனைவரும் சாதிப்பெயரை சேர்த்தே எழுதி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அனைவரும் விரும்பும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாதிப்பெயர் இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதை தான் நல்ல நோக்கத்திற்காக கூறியதாகவும், இது விவாதமாவது தனக்கு மகிழ்ச்சியே என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கார்த்தி சிதம்பரம் பேட்டி