உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த கார்த்திகேயன் முரளி
கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி வீழ்த்தியுள்ளார். தற்போது நடந்து வரும் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் 24 வயதான கார்த்திகேயன் முரளி உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். இதன் மூலம், ஹரிகிருஷ்ணா மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்குப் பிறகு கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை கார்த்திகேயன் முரளி படைத்துள்ளார். கார்த்திகேயனின் வெற்றியானது இந்தியாவின் எஸ்எல் நாராயண் மற்றும் அர்ஜுன் எரிகைசியுடன் இணைந்து, ஜாவோகிர் சிந்தாரோவ், டேவிட் பாரவியன் மற்றும் நோடிர்பெக் யாகுபோவ் ஆகியோருக்கு இணையாக 7க்கு 5.5 மதிப்பெண்களுடன் அவரது கூட்டு முன்னணியைப் பெற உதவியது.