டெஸ்ட் கிரிக்கெட்டில் 6வது இரட்டை சதம் : சச்சின், சேவாக் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்சன்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது ஆறாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, டெஸ்டில் 8,000 ரன்களை கடந்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கிடையில், இது ஒட்டுமொத்த டெஸ்டில் அவரது 28வது சதமாகும். அவர் 296 பந்துகளில் 215 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 23 பவுண்டரிகள் அடங்கும். மேலும் வில்லியம்சன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஹென்றி நிக்கோல்ஸுடன் இணைந்து 363 ரன்கள் கூட்டாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்கள்
டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததில் வில்லியம்சன் 6 இரட்டை சதங்களுடன் மார்வன் அட்டபட்டு, வீரேந்திர சேவாக், ஜாவேத் மியாண்டட், யூனிஸ் கான், ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களை சமன் செய்துள்ளார். முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மட்டுமே 7 இரட்டை சதங்களுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதத்தை வைத்துள்ளார். மேலும் வில்லியம்சன் 94 போட்டிகளில் 8,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் நியூசிலாந்து பேட்டர் ஆனார். அவர் இப்போது 54.89 என்ற நம்பமுடியாத சராசரியில் 8,124 ரன்கள் எடுத்துள்ளார்.