Page Loader
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 01, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்த ஜிம்மி ஆடம்ஸ் பதவியிலிருந்து விலகுகிறார். அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் முடிவடையும் நிலையில், அவர் தொடர்ந்து அணியில் பணியாற்ற விரும்பவில்லை எனத் தெரிகிறது. ஜனவரி 2017 இல் ரிச்சர்ட் பைபஸிடம் இருந்து பொறுப்பை ஏற்ற பிறகு ஆடம்ஸ் ஏறக்குறைய ஆறரை ஆண்டுகளாக இந்த பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள நிறைய மாற்றங்களுக்கு பின்னணியில் ஆடம்ஸ் முக்கிய பங்கு வகித்தார். அணியின் சிஇஓ ஜானி கிரேவ், பயிற்சியாளர் கல்வி மற்றும் மேம்பாடு, விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவம் தொடர்பான உயர் செயல்திறன் கட்டமைப்பை அணியில் மாற்றியமைத்ததற்காக ஜிம்மி ஆடம்ஸை புகழ்ந்துள்ளார்.

jimmy adams actions in cwi

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜிம்மி ஆடம்ஸ் செய்த மாற்றங்கள்

இவரது பதவிக்காலத்தில் தான் மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் தொடங்கப்பட்டது. மேலும் ஆடம்ஸின் பதவிக் காலத்தில் மகளிர் மற்றும் இளைஞர் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான தனித் தேர்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. எனினும் ஆடம்ஸின் பதவிக்காலத்தில் ஆடவர் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. 2016 இல் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஐசிசி போட்டிகளில் ஒருமுறை கூட ஆடவர் அணி நாக் அவுட் கட்டத்தை எட்டவில்லை. மேலும், கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையின் ஆரம்ப கட்டத்தை கூட அவர்களால் தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதவியிலிருந்து விலகும் ஆடம்ஸ், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, வாரியத்தின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.