NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வரலாறு படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா; ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் 2024க்கான விருது வென்று சாதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாறு படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா; ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் 2024க்கான விருது வென்று சாதனை
    ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டருக்கான விருது வென்றார் ஜஸ்ப்ரீத் பும்ரா

    வரலாறு படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா; ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் 2024க்கான விருது வென்று சாதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 27, 2025
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐசிசியின் ஒரு காலண்டர் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்துள்ளார்.

    2024க்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டியில் ஜோ ரூட், டிராவிஸ் ஹெட் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பரிந்துரையில் இருந்த நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

    ஜஸ்ப்ரீத் பும்ராவின் 2024 ஆம் ஆண்டு நினைவுகூரத்தக்க ஆண்டாகும். ஏனெனில் அவர் 13 போட்டிகளில் 14.92 சராசரியில் 71 விக்கெட்டுகளை எடுத்தார்.

    ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் அவர் 32 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரையும் சொந்த மண்ணில் எடுத்தது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது.

    பார்டர் கவாஸ்கர் டிராபி

    பார்டர் கவாஸ்கர் டிராபியில் சாதனை

    32 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு பார்டர் கவாஸ்கர் தொடரில் எந்த ஒரு பந்து வீச்சாளராலும் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகள் என்ற சாதனையை ஜஸ்ப்ரீத் பும்ரா சமன் செய்தார்.

    2024 ஆம் ஆண்டில் 31 வயதான வேகப்பந்து வீச்சாளரின் சாதனைகள், ஒரு காலண்டர் ஆண்டில் 70 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்கு இந்தியர்கள் வரிசையில் அவரையும் சேர்த்துள்ளது.

    ஐசிசியின் காலண்டர் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதுகளை ராகுல் டிராவிட், கவுதம் காம்பிர், வீரேந்திர சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பிறகு, ஐசிசியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ஆறாவது இந்தியர் பும்ரா ஆவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜஸ்ப்ரீத் பும்ரா
    ஐசிசி
    டெஸ்ட் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்

    ஜஸ்ப்ரீத் பும்ரா

    ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய கிரிக்கெட் அணி
    World Cup Player of the Torunament : தொடர்நாயகன் விருதுக்கு நான்கு இந்திய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் ஐசிசி

    ஐசிசி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம் டெஸ்ட் தரவரிசை
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தரவரிசை
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அட்டவணை வெளியீடு: விவரங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    WT20 WC: 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த சோகம்: அரையிறுதி தகுதியை இழந்த இந்திய அணி இந்திய அணி

    டெஸ்ட் கிரிக்கெட்

    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய விளையாடும் லெவன் அணி அறிவித்தார் கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மாவின் டாஸ் முடிவை விளாசிய கிரிக்கெட் நிபுணர்கள் பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 3வது டெஸ்ட்: ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா ஜஸ்ப்ரீத் பும்ரா
    BGT 2024-25: பிரிஸ்பேனில் தத்தளிக்கும் இந்திய அணி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் சிக்கல் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    இந்தி தேசிய மொழி கிடையாது; கல்லூரி விழாவில் உரையாற்றிய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பேச்சு அஸ்வின் ரவிச்சந்திரன்
    கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு கவுதம் காம்பிர்
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை ஸ்மிருதி மந்தனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025