
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எப்) போபாலில் நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் மற்றும் ஆர்.நர்மதா நிதின் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு போட்டியில் வெண்கலம் வென்றனர்.
இதற்கிடையே மற்றொரு 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வருண் தோமர் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் வெள்ளி வென்றனர். இதன் மூலம் இந்திய தற்போது வரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியாவுக்கு பதக்கம்
Fourth medal confirmed for India as Rhythm Sangwan Varun Tomar reach the gold medal match of the 10m Air Pistol Mixed Team event at the @issf_official World Cup Rifle/Pistol Bhopal. You can watch the final here 👇 at 12 noon IST#ISSFWorldCupBhopal #TeamIndia pic.twitter.com/UAjxnC4g3F
— NRAI (@OfficialNRAI) March 23, 2023