
சானியா மிர்சா-முகமது ஷமி திருமண வதந்தி: சானியாவின் தந்தை இம்ரான் கடுமையாக மறுப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சிறந்த மகளிர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் கடந்த சில தசாப்தங்களாக நாடு கண்ட வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் இருவர்.
முஹம்மது ஷமி 2023 ODI உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியை இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய காரணமானவர்.
கடந்த சில நாட்களாக, சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி பரவத் தொடங்கியது.
இந்த செய்திக்கு, சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் கடுமையாக பதிலளித்துள்ளார்.
இதுபற்றி NDTV வெளியிட்ட செய்தியில் இம்ரான்,"இதெல்லாம் குப்பை. சானியா அவரை சந்திக்க கூட இல்லை." என்றார்.
திருமண முறிவு
இரு வீரர்களும் திருமண உறவில் மோசமான அனுபவத்தை பெற்றனர்
சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் சோயிப் மாலிக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து பெற்ற நிலையில், ஷமியும் அவரது மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து பிரிந்துள்ளார்.
சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர் கணவர் சோயிப் மாலிக்கை பிரிந்ததாக அறிவித்த சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, சமீபத்தில் ஹஜ் புனித பயணத்தை தொடங்கினார்.
தொழில்முறை டென்னிஸிலிருந்தும் ஓய்வு பெற்ற சானியா, சமீபத்தில் மதிப்புமிக்க பிரெஞ்ச் ஓபன் 2024 க்கு தூதராக பணிபுரிந்தார்.
சமூக ஊடகங்களில், அவர் இப்போது ஒரு 'மாற்றும் அனுபவத்திற்கு' தயாராகி வருவதாக வெளிப்படுத்தினார்.