சமீர் ரிஸ்வியின் ருத்ரதாண்டவம்! மும்பை பந்துவீச்சை சிதறடித்த டெல்லி கேபிடல்ஸ் இளம் புயல்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்த சமீர் ரிஸ்வி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பைக்கு சிம்ம சொப்பனமான ரிஸ்வி
அதிரடி அரைசதம்
163 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சைத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸிற்கு டெல்லி கேப்பிடல்ஸின் ரிஸ்வி பெரும் அதிர்ச்சியளித்தார். வெறும் 22 பந்துகளில் தனது அதிரடி அரைசதத்தைப் பதிவு செய்தார் ரிஸ்வி. தனது இன்னிங்ஸில் 7 பிரம்மாண்ட சிக்ஸர்கள் மற்றும் 7 நேர்த்தியான பவுண்டரிகளை விளாசி, மும்பை பந்துவீச்சாளர்களின் லைன் மற்றும் லெந்தை முற்றிலும் சீர்குலைத்தார். ஆரம்பத்தில் 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆபத்பாந்தவனாக வந்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும், இதற்காக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
மும்பையின் பின்னடைவு:
டெல்லி கேப்பிடல்ஸின் 'வலது கை ரெய்னா'?
சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள், அவரை சென்னையின் முன்னாள் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஐபிஎல் 2026 தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.