ஐபிஎல் 2023 : ஜடேஜாவை சமாளிப்பாரா சூர்யகுமார் யாதவ்! ஒரு ஒப்பீடு!
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் 12வது போட்டியில் ஐபிஎல்லின் வலுவான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 8) மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அவரை விரைவாக வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் அனுபவம் இல்லாத ஒன்றாக இருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு அவசியமாக உள்ளது.
சூர்யகுமார் யாதவ் vs ரவீந்திர ஜடேஜா
சூர்யகுமார் யாதவ் vs ரவீந்திர ஜடேஜா ஒப்பீடு
ஜடேஜா மற்றும் சூர்யகுமார் ஒன்பது ஐபிஎல் போட்டிகளில் எதிரெதிர் அணிகளில் விளையாடியுள்ள நிலையில், இரண்டு முறை சூர்யகுமாரை ஜடேஜா வீழ்த்தியுள்ளார்.
மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் சிறப்பானதாக இருந்தாலும், இதே மிடில் ஓவர்களில் சிஎஸ்கேயின் சுழற்பந்து வீச்சாளர்களை, குறிப்பாக ஜடேஜாவை அவர் சமாளிக்க வேண்டும்.
சூர்யகுமார் யாதவ் ஜடேஜாவுக்கு எதிராக 76.92 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 40 ரன்கள் குவித்துள்ளார். ஜடேஜாவின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத நிலையில், நான்கு பவுண்டரிகளை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.