"ஷமி ஏன் விளையாடல?": ரிஷப் பண்ட் கொடுத்த விசித்திரமான பதில்; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் டாஸின் போது, லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் வர்ணனையாளர் இயன் பிஷப் இடையே ஏற்பட்ட விசித்திரமான உரையாடல் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இல்லாதது குறித்து கேட்ட கேள்விக்கு பண்ட் அளித்த குழப்பமான பதில் ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் வழக்கமான கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக விலகியதால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ரவீந்திர ஜடேஜாவும் இப்போட்டியில் விளையாடவில்லை. லக்னோ அணியிலும் முகமது ஷமிக்கு பதிலாக மொஹ்சின் கான் சேர்க்கப்பட்டார்.
சர்ச்சை
லைவ் டிவியில் நடந்த விசித்திரமான சர்ச்சை
டாஸின் போது முகமது ஷமி அணியில் இடம் பெறவில்லை என்பதை ரிஷப் பண்ட் உறுதிப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த இயன் பிஷப், ஷமி நீக்கப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு பண்ட் தெளிவற்ற, முன்னுக்குப் பின் முரணான பதில்களைத் தர, பிஷப் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டு தெளிவு பெற முயன்றார். பண்ட்டின் இந்த குழப்பமான ரியாக்ஷன் மற்றும் பிஷப்பின் அடுத்தடுத்த கேள்விகள் அடங்கிய வீடியோ கிளிப் தற்போது எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கப் போராடிய நிலையில், லக்னோ ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rishabh pant looked completely zoned out at the toss interview 😭 pic.twitter.com/iTiE1CGd3E
— Knight (@elementary_talk) May 19, 2026