LOADING...
CSK பிளேஆஃப் செல்ல இன்னும் வாய்ப்பு இருக்கா? SRH-இடம் தோற்ற பின் ருதுராஜ் படைக்கு இருக்கும் ஒரே வழி
சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது

CSK பிளேஆஃப் செல்ல இன்னும் வாய்ப்பு இருக்கா? SRH-இடம் தோற்ற பின் ருதுராஜ் படைக்கு இருக்கும் ஒரே வழி

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2026
09:55 am

செய்தி முன்னோட்டம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, பேட் கம்மின்ஸின்(3/28) சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் 180/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் டெவால்ட் பிரெவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி, இஷான் கிஷானின் அதிரடி 70 ரன்கள் மற்றும் ஹென்ரிச் கிளாசனின் 47 ரன்கள் உதவியோடு 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

வாய்ப்புகள்

சிஎஸ்கே பிளேஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

தற்போது 13 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 12 புள்ளிகளுடன் உள்ளது. மே 21-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் தங்களின் கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே வென்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். எனவே, சென்னை அணி மற்ற அணியின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும்.

நிபந்தனைகள்

சிஎஸ்கே தகுதி பெற வேண்டிய நிபந்தனைகள்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் சிஎஸ்கே மிக அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் கட்டாயம் வெல்ல வேண்டும். தோற்றால் உடனே வெளியேற நேரிடும். 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி, மே 23 அன்று லக்னோவிடம் தோற்க வேண்டும். பஞ்சாப் வென்றால் 15 புள்ளிகளுடன் சிஎஸ்கேவை முந்திவிடும். 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி, தங்களின் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றிலாவது தோற்க வேண்டும். 11 புள்ளிகளுடன் உள்ள கேகேஆர் அணி, மும்பை அல்லது டெல்லிக்கு எதிரான தங்களின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது தோற்க வேண்டும். சுருக்கமாக கூறின், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும்.

Advertisement