LOADING...
ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத்! அர்ஷத் கான், ரஷீத் கான் பந்துவீச்சில் சிதறிய பெங்களூரு; கில், பட்லர் அதிரடி ஆட்டம்
ஆர்சிபியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அதிரடி வெற்றி

ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத்! அர்ஷத் கான், ரஷீத் கான் பந்துவீச்சில் சிதறிய பெங்களூரு; கில், பட்லர் அதிரடி ஆட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2026
07:04 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் 42வது லீக் போட்டியில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கானின் அபாரமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் மற்றும் ராகுல் தேவாட்டியா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றியை உறுதி செய்தனர்.

பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்

ஆர்சிபி இன்னிங்ஸ் மற்றும் குஜராத் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம்

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி அதிரடியாகத் தொடங்கினாலும், ஜேக்கப் பெத்தேல் 5 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கோலியும் 28 ரன்களில் வெளியேறினார். தேததத் படிக்கல் (40 ரன்கள்) மற்றும் ரஜத் பாட்டிதார் ஆகியோர் அணியை மீட்க முயன்ற போதிலும், குஜராத் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். குஜராத் தரப்பில் அர்ஷத் கான் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரஷீத் கான் 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆர்சிபி அணியைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த உதவினர்.

விராட் கோலி

விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமாரின் வரலாற்று சாதனைகள்

இந்தப் போட்டியில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 450 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 13 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் ஆர்சிபி அணியின் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். தற்போது 17 விக்கெட்டுகளுடன் அவர் இந்த சீசனில் பர்ப்பிள் கேப்பை தன் வசம் வைத்துள்ளார்.

Advertisement

புள்ளிப்பட்டியல்

குஜராத் அணியின் அதிரடி சேஸிங் மற்றும் புள்ளிப்பட்டியல்

குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். இதில் மூன்று சிக்ஸர்களை விளாசிய அவர், நரேந்திர மோடி மைதானத்தில் 50 ஐபிஎல் சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கியதுடன், ஐபிஎல் வரலாற்றில் 200 சிக்ஸர்களைக் கடந்த 12-வது வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். இறுதியில் ராகுல் தேவாட்டியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் 5வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது, ஆர்சிபி அணி 2வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement