
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற 35வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வென்றது.
அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியில் சிறப்பாக பந்துவீசிய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர் அபாரம்
204 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் 7 ரன்களில் அவுட்டானார்.
எனினும், சாய் சுதர்சன் (36 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (97 ரன்கள் நாட் அவுட்) சிறப்பாக ஆடி அணியை மீட்டனர்.
ஷெர்பான் ரூதர்ஃபோர்டும் 41 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.