ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மேற்கொண்ட ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக, அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 தொடரின் ஏழாவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் சிஎஸ்கே அணி, 206 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் தான், இந்தப் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக GT அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.