Page Loader
ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும்
முன்னதாக முதல் 21 ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி மே 26 அன்று  சென்னையில் நடைபெறும்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2024
05:59 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது நடைபெற்று வரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) முழு அட்டவணையை பிசிசிஐ இறுதியாக அறிவித்துள்ளது. அதன்படி, மே 26ஆம் தேதி சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். அதேநேரத்தில், பிளேஆஃப் ஆட்டங்கள் அகமதாபாத் மற்றும் சென்னையில் நடைபெறும். முன்னதாக, ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான முதல் 21 ஆட்டங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த போட்டி தொடரில், லீக் கட்டத்தில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும். அதில் ஏழு ஆட்டங்கள் சொந்த மண்ணிலும், ஏழு வெளியூர்களிலும் விளையாடும். தற்போது 10 அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் குழுவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் இரண்டு முறை விளையாடுவார்கள்.

embed

ஐபிஎல் 2024 முழு அட்டவணை வெளியீடு

Full Schedule IPL 2024 #TATAIPL pic.twitter.com/KmSbDPwx6v— Prakash (@JeyVamos) March 25, 2024