
ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா எம்எஸ் தோனி?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் மோதும் நிலையில் அனைவரின் பார்வையும் எம்எஸ் தோனி மீது திரும்பி உள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) போட்டி நடைபெறவுள்ளது.
இந்த சீசனில் இரு அணிகளும் இரண்டு வெற்றி மற்றும் பல தோல்விகளை பெற்றுள்ளன.
இதற்கிடையில், சிஎஸ்கே கேப்டன் தோனி கடந்த காலத்தில் ஆர்சிபிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.
தோனி ஆர்சிபிக்கு எதிராக 39.9 என்ற சராசரியில் மொத்தம் 838 ரன்கள் குவித்துள்ளார். ஆர்சிபிக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 140.84 ஆகும்.
Dhoni need 2 runs to surpass warner record against csk
டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்க 2 ரன்கள் மட்டுமே தேவை
ஆர்சிபிக்கு எதிராக அதிக ஐபிஎல் ரன்களைக் குவித்த பேட்டராக டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னரை (839) கடக்க எம்எஸ் தோனிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
ஆர்சிபிக்கு எதிராக இவர்களை தவிர வேறு எந்த பேட்டரும் 800 அல்லது அதற்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை, ஆர்சிபிக்கு எதிராக மொத்தம் நான்கு அரைசதங்களை 33 ஆட்டங்களில் அடித்துள்ளார்.
ஐபிஎல்லில் அவர் எடுத்த டாப் 5 ஸ்கோரில் மூன்று ஆர்சிபி அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.
2019 பதிப்பில் வந்த அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 84* இதில் அடங்கும். திங்கட்கிழமை போட்டி நடக்க உள்ள பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தான் இந்த ஸ்கோரை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.