ஐபிஎல் 2023 : கொட்டித்தீர்த்த கனமழை! இறுதிப்போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக திங்கட்கிழமைக்கு (மே 29) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2023 தொடர் இரண்டு மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த முறைகளை போல் அல்லாமல் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெற அனைத்து அணிகளுமே கடைசி வரை கடுமையாக மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கடைசி வரை போராடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து மழை பெய்த காரணமாக போட்டி திங்கட்கிழமைக்கு (மே 28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.