Page Loader
ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்

ஐபிஎல் 2023 : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 23, 2023
11:41 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 சீசனுக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபில் மினி ஏலத்திற்கு முன்பாக மார்க்ரமை சன்ரைசர்ஸ் அணி தக்கவைத்ததால், அவரை கேப்டனாக்க அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. எனினும் புவனேஷ்வர் குமார் மற்றும் மயங்க் அகர்வால் போன்றோரும் கேப்டன்ஷிப் போட்டியில் இருந்த நிலையில் தற்போது மார்க்ரமை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த எஸ்ஏ 20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் துணை அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மார்க்ரம் தலைமையில் முதல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ட்வீட்