NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
    5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

    INDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 29, 2025
    08:29 am

    செய்தி முன்னோட்டம்

    வருண் சக்ரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியது சாதாரணமானது அல்ல. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது வருண் இந்திய அணிக்கு திரும்பினார்.

    அங்கு இந்தியா நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது மற்றும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

    அடுத்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அவர் தனது அற்புதமான ஆட்டத்தைத் தொடர்ந்து, இதுவரை மூன்று போட்டிகளில் 8.50 சராசரியில் 10 விக்கெட்டுகளை எடுத்தார்.

    செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட்டில் வருணின் 5-24 என்ற ஸ்பெல் அவரது இரண்டாவது 5 விக்கெட் ஸ்பெல்லாகும்.

    ஆனால், இது அவரது சோகமான சாதனையாக மாறியதுதான் வேதனையே. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

    சாதனை முறியடிப்பு

    குல்தீப் யாதவின் சாதனை முறியடிப்பு

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய டி20 அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி ஆறு போட்டிகளுக்குப் பிறகு நீக்கப்பட்டார்.

    அவற்றில் மூன்று அந்த ஆண்டின் டி20 உலகக் கோப்பையில் வந்தன. அந்த சமயத்தில் ஆறு போட்டிகளில் 66 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

    இந்நிலையில், கடந்த அக்டோபரில் மீண்டும் வந்ததில் இருந்து, வரிசையாக அவரது 10 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

    இதன்மூலம், தொடர்ச்சியாக 10 டி20 போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட் எடுத்த இந்தியரான குல்தீப் யாதவின் (25 விக்கெட்டுகள்) சாதனையை முறியடித்தார்.

    மேலும், சர்வதேச அளவில், ரஷித் கானின் 30 மற்றும் சைசருல் இட்ரஸின் 28 விக்கெட்டுகளுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

    சோதனை

    சாதனை சோதனையாக மாறிய தருணம்

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான போட்டியில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம், தனது இரண்டாவது 5 விக்கெட் ஸ்பெல்லை எடுத்தார்.

    இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 முறை ஐந்து விக்கெட் ஸ்பெல்லை எடுத்த குல்தீப் யாதவ் மற்றும் புவனேஷ்குமாரின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.

    வருண் சக்ரவர்த்தி இதற்கு முன்னர் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் எடுத்த நிலையில், அந்த போட்டியில் இந்தியா தோற்றது.

    இந்நிலையில், தற்போதும் இந்திய அணி தோற்றதால், 5 விக்கெட் எடுத்த இரண்டு முறையும் தனது அணி தோல்வியைச் சந்தித்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துவிட்டார்.

    இந்தியா vs இங்கிலாந்து 3வது டி20

    இந்தியா vs இங்கிலாந்து 3வது டி20 ஹைலைட்ஸ்

    இந்தியா vs இங்கிலாந்து இடையே ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.

    172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

    இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs இங்கிலாந்து

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    டி20 கிரிக்கெட்

    INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா? சஞ்சு சாம்சன்
    ஐபிஎல் 2025 ஏலத்தை நடத்தப்போவது இவர்தான்; வெளியானது அறிவிப்பு ஐபிஎல் 2025
    டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணி
    ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025

    இந்திய கிரிக்கெட் அணி

    ரோஹித் ஷர்மாவுக்கு இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு இல்லை? தேர்வாளர்கள் திட்டவட்டம் எனத் தகவல் ரோஹித் ஷர்மா
    ஓய்வோ, கட்டாய நீக்கமோ கிடையாது; சிட்னி டெஸ்டில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    காயத்தால் மைதானத்திலிருந்து வெளியேறிய ஜஸ்ப்ரீத் பும்ரா; இந்திய அணியை வழிநடத்துவது யார்? ஜஸ்ப்ரீத் பும்ரா
    பார்டர் கவாஸ்கர் 5வது டெஸ்ட்: மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்; 181 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபி

    இந்தியா vs இங்கிலாந்து

    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு டெஸ்ட் கிரிக்கெட்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025