INDvsAUS Final : இறுதிப்போட்டியை நேரில் காண முன்னாள் வெற்றி நாயகர்கள் அனைவருக்கும் அழைப்பு
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நவம்பர் 19, 2023 அன்று ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஆடம்பரமான நிறைவு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிறைவு விழாவில் பங்கேற்க உலகக்கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் ஐசிசி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், 1992இல் ஒருநாள் உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணிக்கு வென்று கொடுத்த இம்ரான் கான் இதில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளதால், அவர் இதில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமருக்கும் இறுதிப்போட்டியை நேரில் காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சார்பாக அந்நாட்டு துணை பிரதமர் மார்லஸ் வர உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்களுக்கு அழைப்பு
19ம் தேதி நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு உலகக் கோப்பையை வென்ற அனைத்து நாட்டு கிரிக்கெட் கேப்டன்களுக்கு அழைப்பு#ICCWorldCup2023 #India #Cricket #NarendraModiStadium #ThanthiTV pic.twitter.com/bLdBdTNwxY
— Thanthi TV (@ThanthiTV) November 17, 2023