INDvsAUS Final : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ். ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.