Page Loader
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2023
01:38 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், உலக செஸ் ஆர்மகெடான் ஆசியா & ஓசியானியாவின் இறுதிப் போட்டியில் முன்னாள் உலக ரேபிட் சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை வீழ்த்தி பட்டம் வென்றார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி வரை போராடி குகேஷ் வென்றார். வெற்றிக்கு பிறகு, "2023 ஆசியா மற்றும் ஓசியானியா குழுவின் விறுவிறுப்பான ஆர்மகெடோன் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்றதில் மகிழ்ச்சி! இறுதியாக ஒரு வேகமான நேரக் கட்டுப்பாடு எலைட் நிகழ்வில் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று குகேஷ் ட்வீட் செய்தார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷின் வெற்றிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

குகேஷ் ட்வீட்