
பிபா உலக தரவரிசையில் நான்கு ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பெற்ற இந்திய கால்பந்து அணி
செய்தி முன்னோட்டம்
பிபா வியாழன் (ஜூலை 20) அன்று வெளியிட்ட உலக கால்பந்து தரவரிசையில், ஆடவர் இந்திய கால்பந்து அணி 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 100வது இடத்தை தாண்டி முன்னேறியுள்ளது.
முன்னதாக, 100வது இடத்தில் இருந்த இந்திய அணி, இந்த மாத தொடக்கத்தில் பெங்களூரில் நடைபெற்ற எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் வெற்றிக்குப் பிறகு, ஒரு இடம் முன்னேறி 99 வது இடத்திற்கு முன்னேறியது.
பிபா தரவரிசையில், 1996 இல் 94 வது இடத்தைப் பிடித்ததுதான் இந்தியாவின் அதிகபட்ச ரேங்க் ஆகும்.
பின்னர் 1993 இல் 99 வது இடத்தையும், 2017 மற்றும் 2018 இல் 96 வது இடத்தையும் அடைந்தது. அதன் பிறகு கடந்த மாதம் 100 வது இடத்தைப் பிடித்தது.
argentina tops in fifa ranking worldwide
உலக தரவரிசையில் முதலிடத்தில் அர்ஜென்டினா
2022 பிபா உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணி உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அர்ஜென்டினாவைத் தொடர்ந்து, பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் முறையே இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
ஆறாவது இடத்தில் குரோஷியாவும், ஏழாவது இடத்தில் நெதர்லாந்தும், எட்டாவது இடத்தில் இத்தாலியும் உள்ள நிலையில், ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் முறையே போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளன.
ஆசியாவை பொறுத்தவரை, அதிகபட்சமாக ஜப்பான் 20வது இடத்திலும், ஈரான் 22வது இடத்திலும், ஆஸ்திரேலியா 27வது இடத்திலும், தென்கொரியா 28வது இடத்திலும், சவுதி அரேபியா 54வது இடத்திலும் உள்ளன.