Page Loader
இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மீதான தாக்குதல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்!!
இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மீதான தாக்குதல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்

இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா மீதான தாக்குதல் விவகாரத்தில் புது ட்விஸ்ட்!!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 17, 2023
11:12 am

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் சிலர் தகராறில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அவரது நண்பரின் காரைத் தாக்கியதற்காக 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (பிப்ரவரி 15) இரவு மும்பையில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு வெளியே நடந்துள்ளது. ப்ரித்வி தரப்பில், செல்பி எடுக்க மறுத்ததால், ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் காரை தாக்கி உடைத்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகராறில் ஈடுபட்ட பெண் ஒருவர், ப்ரித்வி மற்றும் அவரது நண்பர்கள் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக கூற, விஷயம் வேறு கோணத்தில் திரும்பியுள்ளது. எது உண்மை என தெரியாத நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

ப்ரித்வி ஷா தாக்குதல் வீடியோ