ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: தடகளத்தில் மேலும் இரண்டு பதக்கங்களை வென்றது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் நேற்று முதல் பதக்கத்தை வென்று பதக்கக் கணக்கைத் தொடங்கியது இந்தியா. குண்டு எறிதலில் இந்திய வீராங்கணை கிரண் பலியா வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவின் கணக்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று ஆண்களுக்கான 10,000மீ ஓட்டத்தில் இரண்டு பதக்கத்தை வென்று அசத்தியிருக்கிறது இந்தியா. 10,000மீ ஓட்டத்தை 28:15.38 நேரத்தில் கடந்து இந்திய தடகள வீரர் கார்த்திக் குமார் இரண்டாவது இடத்தையும், 28:17.21 நேரத்தில் நிறைவு செய்து குல்வீர் சிங் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியிருக்கின்றனர். 28:13.62 நேரத்தில் 10,000மீ ஓட்டத்தை நிறைவு செய்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார் பஹ்ரைன் வீரர் யெமடாவ் பலேவ்.