Page Loader
மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2023
06:58 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்தை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ஏ அணியின் சார்பாக களமிறங்கிய அமீ கமானி மற்றும் அனுபமா ராமச்சந்திரன் ஆகியோர் உலக தரவரிசையில் இடம் பெறாதவர்கள் ஆவர். ஆனாலும் இங்கிலாந்தின் 12 முறை உலக சாம்பியனான ரியான் எவன்ஸ் மற்றும் தரவரிசையில் தற்போதைய உலகின் நான்காவது நிலை வீராங்கனையான ரெபேக்கா கென்னாவை வீழ்த்தியுள்ளனர். கோப்பை வென்றது குறித்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, இதே வெற்றியை அடுத்தடுத்த உலகக்கோப்பைகளிலும் தொடர்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்தியா சாம்பியன்