
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷான் விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு இஷான் கிஷான் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
மேலும், அவருக்கு பதிலாக கேஎஸ் பாரத்தை தேர்வுக்குழு அணியில் சேர்த்துள்ளதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.
ட்விட்டர் அஞ்சல்
இஷான் கிஷான் அணியிலிருந்து விடுவிப்பு
🚨 UPDATE 🚨: Ishan Kishan withdrawn from #TeamIndia’s Test squad. KS Bharat named as replacement. #SAvIND
— BCCI (@BCCI) December 17, 2023
Details 🔽https://t.co/KqldTEeD0T