LOADING...
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பத்து வருட டி20 தொடர் சாதனையை இந்தியா தக்கவைக்குமா?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பத்து வருட டி20 தொடர் சாதனையை இந்தியா தக்கவைக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
Dec 08, 2025
05:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கட்டாக்கில் தொடங்குகிறது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான சிறந்த தயாரிப்பாக இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி பத்து ஆண்டுகளாக தக்கவைத்துள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரை இழக்காத சாதனையைப் பாதுகாக்கும் முனைப்பில் உள்ளது.

சாதனை

சாதனைப் பட்டியலில் இந்தியா

சுவாரஸ்யமாக, 2015-16 சீசனுக்குப் பிறகு, சொந்த நாட்டிலோ அல்லது வெளியிலோ தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஒரு டி20 தொடரையும் இழந்ததில்லை. கடைசியாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்தபோது தான், அவர்கள் இந்தியாவைத் டி20 தொடரில் வீழ்த்தினர். அதன்பிறகு, இரு அணிகளும் ஆறு டி20 தொடர்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா மூன்று தொடர்களில் வெற்றி பெற்றது, மீதமுள்ள மூன்று தொடர்கள் சமன் ஆகின. எனவே, இந்திய அணி தனது தோல்வியடையாத சாதனையைத் தொடர சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஷுப்மன் கில்

முதல் போட்டி மற்றும் கில் வருகை

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் கட்டாக், புதிய சண்டிகர், தர்மசாலா, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. முதல் டி20 கிரிக்கெட் போட்டி டிசம்பர் 9 அன்று கட்டாக்கின் பரபாட்டி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. கழுத்து காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்காத ஷுப்மன் கில், முழுமையாகக் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் வலிமையை சோதிக்கும் ஒரு முக்கியமான தொடராக அமையும்.

Advertisement